Wednesday, March 27, 2013

முதல்வன் அர்ஜுனும், ஃபேஸ்புக் அட்மினும்

முதல்வன் அர்ஜுன்- வணக்கம் ஐயா !!
ஒவ்வொரு வருஷமும் ஃபேஸ்புக் வர பசங்க இங்கயாச்சு ஒரு நல்ல ஃபிகர் மாட்டாதன்ற ஏக்கத்தோடதான் வராங்க,ஆனா அவுங்களுக்கு கெடைக்கர்து என்னவோ அட்டு ஃபிகரும்,சப்ப ஃபிகரும் மட்டும்தான்,இது என் வாழ்க்கைலியும் நடக்குது...
இதுக்கு காரணம் என்னங்கயா ???

Page அட்மின்- என்ன தம்பி சொல்றீங்க ?? தெருவுக்கு தெருவுக்கு ஃபிக்ர்,ச்சேட்டுன்ற பேருல கடலை போடுறாங்க, கமன்ட்ஸுல மொக்க போடுறாங்க,இதயெய்லாம் மீறி போன் நம்பர் வாங்கி பேசவும் செய்ராங்க, கடந்த 4 வருஷத்துல ஃபிகர் இல்லாத பசங்க அக்கௌன்ட் இருக்கானு சொல்லுங்க.

மு.அ - நீங்க சொல்றா மாரி ஃபிகருங்க எல்லாம் சாதா அக்கௌன்ட் வச்சிருக்கவங்களுக்கு கெடைக்ர்தில்லையேயா ??
Page வச்சிருக்கவங்களுக்கும், Group ஓபன் பண்றவங்களுக்கும்தானய்யா கெடைக்குது ???
ஏன் நானே இன்னைக்கு வரைக்கும் ஃபிகருக்காக அலஞ்சிட்டுதான்யா இருக்கேன்..

அட்மின்- குத்தம் சொல்றவங்க சொல்லிட்டுதான் இருப்பாங்க..
தம்பி நான் பேஜ் ஆரம்பிச்ச அப்புறம் பசங்களுக்கு ஃபிகர் கெடைக்குற எண்ணிக்க 62.5 சதவீதமா ஆயிருக்கு,

மு.அ- ஆனா கேரளாவுல 100 சதவீதம் இருக்கேயா ???

அட்மின் - ம்ச்ச் !! பசங்களுக்கு ஃபேக் ஐடி மூலமா சந்தோஷப்படுத்தர்துல 5வது எடத்துல இருந்து 3வது எடத்துக்கு முன்னேறி இருக்கு'.

மு.அ - ஃபேக் ஐடில கெடைக்குற சந்தோஷத்த விட, உண்மையான ஃபிகர உஷார் பண்றதுக்குதான் மதிப்பு ஜாஸ்தி இல்லிங்கலாயா..

அட்மின் - நான் பேஜ் ஆரம்பிச்ச அப்புறம் ஃபிக்ர் கெடைக்காம வரும கோட்டுகக்கு கீழ இருந்தவங்களோட எண்ணிக்க 32 ல இருந்து 25 சதவீதமா கொறஞ்சிருக்கு..

மு.அ - ஆனா இன்னைக்கும் நம்ம கிராமங்கள்ல ஒரு ஆளோட சராசரி ஃபேஸ்புக் ஃபிகர்களோட எண்ணிக்க வெறும் 3 தானுங்கயா ???

அட்மின் - புள்ளி விவரம் தெறியாம பேசாதிங்க தம்பி...

மு.அ - ஹூம்ம்ம் !! Ok
இது World figure organisation report, இது FBI(facebook investigation) report,
ஃபிகர் கூட்டங்கள் குடுக்குற லைக்கெல்லாம் பசங்களுக்கு சரியா போய் சேர்ரதில்ல, உங்க அட்மின்களே புடுங்கி சாப்டாங்கனு Human rights commision ரிப்போர்ட் சொல்லுது..

அட்மின் - தம்பி அது 1000 பக்க FB கன்டிஷன், அத சாவகாஸமா படிச்சி மக்களுக்கு பொருமையா நீ சொல்லு, அடுத்த கேள்வி ??

மு.அ - ஐயா நீங்க பேஜ் ஆரம்பிக்கர்துக்கு முன்னாடி ஃபிகருங்கள ஃபிரண்டா வச்சிருந்திங்களா ??
அட்மின்- இல்லப்பா சாதாரன ஏழ பையனா, ஃபிகருங்களே இல்லாமதான் இருந்தேன்..

மு.அ -ஐயா, உங்க அக்கௌன்ட்ல பொண்ணுங்க எத்தன பேருங்கயா ??

அட்மின் - வெறும் 7 பேருப்பா..

மு.அ - அதாவது மாசம் ஒரு ஃபிகர்னா கூட நாலு வருசத்துல 48 ஃபிகருங்கதான் அக்கௌன்ல இருக்கனும், ஆனா உங்க அக்கௌன்ட்ல 467 பொண்ணுங்க இருக்காங்களே, அது எப்புடிங்கயா வந்துச்சு ???

அட்மின் - இது அபான்டமான குற்றச்சாட்டு, வேனும்னா facebook la complaint பண்ணுங்க, பிரச்சனய சந்திக்க நான் தயார்..

மு.அ- Complainta ?? ம்ஹும்,ம்ஹும், FBல நிலுவைல இருக்க Complaints எண்ணிக்க மட்டுமே 5 லட்சம்.அப்டினு நான் சொல்லல human rights commision report சொல்லுது.

நியாபகம் இருக்குங்களா உங்க பேஜ்ல About usல இருக்க வாக்குறுதிகள்.

அட்மின் - எப்புடி மறந்து போகும் ?எழுதுனது நான்தானே..
"மக்கள் பிரச்சனைகளை எடுத்து பேச,ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை
குடுக்க, ஃபிகர்களை தங்கைகளாக பார்க்க, கல்விக்கு முக்கியத்துவம் குடுக்க.."ல"னவுல புள்ளி வைக்கல கல்விக்கு கலவினு ப்ரிண்ட் ஆகியிருக்கும்,மனப்பாடம் பா..

மு.அ - இதெல்லாம் நடந்துச்சிங்களா ?

அட்மின் - நடக்கலன்றியா ?

மு.அ - ஆண் பெண் சம உரிமைனு சொல்றிங்க ஆனா அந்த சம உரிமை போனதுக்கு காரணமே நீங்கதானுங்கயா ???

அட்மின் - தம்பி, என்ன கோவப்படுத்தனும்ற ஒரே நோக்கத்தோட கேள்வி கேக்குறியா ???

மு.அ- ஒரு  பையன் ஃபிகர்கிட்ட உங்க பேஜ்ல கடல போட்டா அவன ப்ளாக் பண்ரிங்க, கேட்டா பேஜ் அட்மின்னு சொல்றான்,
பசங்க மனசு புண்படுது,
அத பத்தி உங்களுக்கு அக்கற கெடையாது,
உங்க கவல எல்லாம் உங்க பேஜ்ல இருக்க ஃபிகருங்க பசங்க கூட பேசி பழககூடாது அப்புடிதானே ???

இப்போ சொல்லுங்க,உங்களுக்கு பசங்க நலன விட ஃபிகருங்கதான முக்கியம் ???
(சின்னசாமி கேமராவ ஆஃப் பண்ண சொல்லு)

அட்மின் - அவ்ளோதான பேட்டி முடிஞ்சுதுல்ல ??

மு.அ - ஆப்ப்ப் !! ஐயா பேட்டி இன்னும் முடியல, மக்கள் பாத்துட்டு இருக்காங்க,நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் சொலல ??
ஸோ ப்ளீஸ் உக்காருங்க..

அட்மின் - இந்த மாதிரிலாம் கேள்வி கேக்க எதிர்க்கட்சி பேஜ் அட்மின் கிட்ட எவ்ளோ வாங்குன ?

மு.அ -நீங்க எதிர்கட்சி அட்மினா இருந்தா எவ்ளோ குடுத்துருப்பீங்க ??

அட்மின் - உன் இஷ்டத்துக்க கேள்வி கேப்ப,நான் பதில் சொல்லிட்டு இருக்கனுமா ?,
என்னைக்காச்சி பேஜ் அட்மினா இருந்துருக்கியா,
ஏன் பேஜ் க்ரியேட் பண்ற ஆப்ஷனாச்சு க்ளிக் பண்ணிருக்கியா ?
பண்ணி பார் ஒரு நாளைக்கு எத்தன லைக்கு,எத்தன கமென்ட்டு, எத்தன ப்ரச்சன, எத்தன அசிங்கம்,எத்தன சிக்கல்,எத்தன டென்ஷன்னு
அட்மினா இருக்கவனுக்குதான்யா தெரியும்,எடுத்தோமா கௌத்தோமானு எந்த முடிவையும் எடுக்க முடியாது.

மு.அ - சுலபமா தீக்க வேண்டிய பிரச்சனய தீக்காம இப்ப சப்ப கட்டு கட்ரிங்களேயா ??

அட்மின் - தீக்குள்ள வெரல விட்டா சுடும்னு சொல்றேன்,உனக்கு புரியல,
விட்டுப்பார்..
ஒருநாள்....ஒரு நாள் நீ அட்மினா இருந்துப்பார் அப்போ புரியும்..

மு.அ - இது எப்புடியா சரியான பதிலா இருக்க முடியும் ?
நீங்க ஜோக் பண்ரிங்க

அட்மின் - நான் ஜோக் பண்ணல, இருந்து பார் அட்மின் பதவி ஒரு முள் கிரீடம், முள் படுக்கனு புரியும்....

மு.அ - நான் எப்புடிங்கயா ?

அட்மின் - சொன்ன உடனே ஜகா வாங்குற பாத்தியா ???
இதுக்குதான் ஒரு பேஜ் அட்மின் கிட்ட மோத கூடாதுன்றது...
சொல்லுங்க தம்பி லைவ் ரிலே ஓடிட்டு இருக்கு,மக்கள் பாத்துட்டு இருக்காங்க...

மு.அ -சரிங்க ஐயா !!! அது சாத்தியம்னா ,நான் இந்த பேஜுக்கு --->> ( https://m.facebook.com/profile.php?id=505094289536442&refid=5 )அட்மினா இருந்து பாக்குறேன்...

நன்றி
By
மனோஜ்