Sunday, April 21, 2013

1ஜி, 2ஜி, 3ஜி

படித்து ரசித்த "கல்லி கிரக்கெட் பதிப்பு"

பெயர் - கல்லி கிரிக்கெட்

தேவையான பொருட்கள் - மட்டை போல ஒன்றும், பந்து போல ஒன்றும்

சில நேரங்களில் காலண்டர் அட்டைகளும் மட்டைகளாகும், ரப்பர் சுற்றப்பட்ட காகிதங்களும் பந்துகளாகும்.

ரூல்ஸ்
*4 பேருக்கு குறைவாக இருந்தால் ஒன் பிட்ச் கேட்ச் உண்டு,

* ஆட்டக்களம் சிறுசாக இருந்தால் through வா செவுத்துல அடிச்சா அவ்ட்.

* பேட்ஸ்ெமன் பந்தை சாக்கடையில் அடித்தால் அடித்தவனே கைவிட்டு எடுத்து, கழுவி கொண்டுவரவேண்டும்.

*பக்கத்துவீட்டு கண்ணாடிகள் உடைந்தால் அவ்ட்.

*பேட்டிங் டீம் தான் அம்பயரிங் செய்ய வேண்டும்..
இன்னும் பல.....

சரி விளையாட்டுக்குள்ள போவோம்....
இங்க எல்லாப் பயலுவளும் ஆல்ரௌண்டர்ஸ்தான், ஆடனும் முடிவு பண்ண பத்து பேர் கொண்ட குழுவுல பாவப்பட்ட சின்னப் பையன் இருந்தா அவன்தான் பிட்ச் புடிக்குற ஏஜென்ட். காலைல 5 மணிக்கே பிட்ச் புடிச்சி டீம்மேட்ஸ் வர வரைக்கும் காத்துருப்பாரு, கேப்டன் பரிதாவப்பட்டு ரெண்டு ஓவரும், 1ஸ்ட் பேட்டிங்கும் தருவாரு..
பேட்டிங் டீமில் முக்கியப் பங்கு வகிப்பவரே அம்பயர்தான்,
லெக் ஸைட்ல ஸ்டிக்குக்கு மேல போனாலும், ஆஃப் சைட்ல பேட்ஸ்மெனுக்கு தள்ளி போனாலும் அம்பயர் தன் கைகளை Wide என்று கூறி நீட்டிவிடுவார்,
இதில் சூட்சமமே ரன் ஔட் ஆகும் போதுதான்,
பாதி ரீச்சில் இருந்தாலும் நாட் ஔட் என்பதே தீர்பாக அமையும்....

ஒரு வேளை பிட்ச் கெடைக்கலனா பார்க், வீட்டு தெருனு கெடைக்குற எடத்துல ஆட ஆரம்பிச்சுருவாய்ங்க,
ஸ்டிக் இல்லன்ற கவல தேவயில்ல,
சைக்களின் முன்பக்க சக்கரமோ,
துடைப்பகட்டயோ,
குப்பைத்தொட்டியோ,
இவை கிடைக்காத பட்சத்தில் "போடு செவுத்துல மூனு கோடு"தான்....அடிக்கப்படும் தூரத்திற்கு ஏற்றாப்போல் 1G,2G,3G வழங்கப்படும் இவை அலைக்கற்றை ஊழல் பங்கல்ல, அடிக்கப்படும் ரன்கள்.
இப்படி 6 முதல் 60 வரை இந்த ஆட்டம் ஆடதவர்களே இல்லை,
"டேய் இது நாட் ஔட் டா, நீ என் பேட்ட குடு நான் போறேன்னு" அழுபோங்கடிக்கும் ஆட்டம் ஆடும் 40 வயதான ப்ளேயர்களையும் ரசிக்கலாம்,
விடுமுறை நாட்களில் கல்லி ஆட்டத்தில்..




நன்றி புதிய தலைமுறை