Wednesday, April 30, 2014

கோடைக்கால கண்ணீர்

நான் அழுதுகொண்டே இருக்கிறேன்.

யாருமே என்னை கண்டுகொள்ளவே இல்லை.
இந்த கோடை காலங்கள் கண்ணீர்களைக் கூட வற்றவைத்துவிடுமா ? ;'(

ஜான்ஸி

எதற்காக அப்படி பார்க்கிறாய் ஜான்சி ? என்றேன்.

கையில் இருந்த திராட்சையை, உதட்டினை குவித்து கடித்தாள்.

"நீ அழகா இருக்க"என்றேன்

சற்றும் கண்டுகொள்ளாமல் இன்னொரு துண்டை வாயிலிட்டாள்.

தண்ணீர் வேண்டுமா என்று கேட்டேன்,

அவள் கண்ணாடி கோப்பையில் பீர் ஊற்றினாள்,

உன்னை பற்றி சொல் என்று கேட்டேன்,

அவள் பீர் பாட்டிலை முழுவதுமாக காலி செய்திருந்தாள்.

ஏன் எதுவுமே பேசாமல் இருக்கிறாய் என்றேன்,

நாற்காலியில் இருந்து எம்பி, என் காலரை பற்றி இழுத்து, உதட்டில் முத்தம் இட்டால்,

நான் ஒன்றுமே பேசவில்லை,

"ஐ லவ் யூ" என்றாள்.

நான் ஆர்டர் செய்த பீரை டம்ப்லரில் ஊற்றினேன்,

"ஷேல் வீ மூவ் டு தி ரூம்" என்று வினவினாள்

நான் சைட்டிஷுக்கு அந்த பாரில் இருக்கும் காஸ்ட்லியான சிக்கன் வருவலை ஆர்டர் செய்தேன்,

மீண்டும் ஒருமுறை நார்காலியில் இருந்து எம்பினால்,

நான் "வெயிட் எ மினிட்" என்று இழுத்திருந்த சிகரட் புகையை ஊதினேன்.

அவளுக்கு ஒரு அழைப்பு வந்தது.

நான் சிக்கனை ருசித்துக்கொண்டிருந்தேன்.

அவள் ஃபோனில் "வீ வில் மீட் ஆஃப்டர் அன் ஹவர்" என்றாள்.

நான் என் கைப்பேசியை எடுத்துப் பார்த்தேன். என் மனைவி 7 முறை அழைத்திருந்தாள்.

ஒரு விபச்சாரி தன் வாடிக்கையாளருக்கு ஒதுக்கும் நேரத்தை கூட என்னால் என் மனைவியிடம் ஒதுக்கமுடியவில்லையே என்று வருந்தினேன்.

பின்பு ஒரு முழுபாட்டில் பீரை அப்படியே குடித்து முடித்தேன்.

"ஜான்ஸி என்னை ஆறுதல் படுத்தினாள், கட்டிலில்"

Thursday, April 24, 2014

தேடல்

உண்மையான அன்பை என்றாவது நீ தேடிச்சென்றதுண்டா ?

நீ அதற்காக ஏங்கும் அந்த நிமிடம் ஒரு பிச்சைக்காரனை நினைவூட்டும்,

மற்றவர்கள் உன்னை கவனிக்க கூட மாட்டார்கள்,

கவனிக்கும் சிலர் தரும் அன்பு , அந்த பிச்சைக்காரனின் தட்டில் விழும் எட்டனாவைப் போல உபயோகமற்றதாகத் தோன்றும்,

நீ ஒருநாயைப்போல துறத்தி அடிக்கப்படுவாய்,

அவ்வளவு எளிதில் அது கிடைப்பதேயில்லை.

யாரும் இல்லாத பாலைவனத்தில் தண்ணீரைத் தேடுவதைப்போல் உணர்வாய்,

உன் மூத்திரத்தை குடித்து, உன் தாகத்தை போக்கிக்கொள்ள நினைப்பாய்,

பின்பு அது முடியவே முடியாது என்பதை தெரிந்துகொள்வாய்,

ஏன் இந்த அன்பில் மட்டும் இத்தனை வேறுபாடுகள்,

குழந்தைக்கு கிடைக்கும் அன்பு,

பிச்சைக்காரர்களுக்கு காட்டப்படும் பரிவு,

புணர்ச்சியில் மனைவியிடம் காட்டப்படும் அன்பு,

அது அல்லாது காட்டப்படும் அன்பு,

ஒரு இளம் காதலர்களின் அன்பு,

வயதான காதலர்களின் அன்பு,

வேசியிடம் காட்டும் அன்பு,

கல்லூரிப் பிரிவின் அன்பு,

தொழில் மீதான அன்பு,

தெய்வத்தின் மீதான அன்பு,

என்று முகமூடியிட்டு வரும் அன்பில், உண்மையான அன்பை அடையாளம் காண முடியுமா ?