Tuesday, September 1, 2015

பளார் பளார்

"ட்ராப் எங்க சார்" என்றவாரு கார் கதைவை திறந்தவுடனேயே முதல் அதிர்ச்சி. "Mein kamf"-by ADOLF HITLER புத்தகம் செங்குத்தாக நிறுத்தப்பட்டிருந்தது. இரண்டாவது அதிர்ச்சி லிரிக்ஸ் புரியாத இங்கிலீஷ் பாடல் ஒன்று ஒலித்துக்கொண்டிருந்தது.

ஒருவித தயக்கத்தோடே "ஃபுல் டைம் கார்தான் ஓட்டுரிங்களா ஜீ" என்றேன். எதிர்ப்பார்த்த கேள்வியை போலவே சிரித்தபடி பதிலளிக்க தொடங்கினார்.

"Actually I am an anglo indian. I had lost everything in my bussiness, except a couple of cars. So instead of working for others, I planned to work for myself ". What about u ? Are u happy with ur work ?-என்றார்.

கல்லூரியில் ஆங்கிலம் தெரியாத டீச்சர் யாராவது ஆங்கிலத்தில் கேள்வி கேட்டாலே திக்கித் தெனரிப்போய்விடுவேன்.
இவரிடம் பேசி மாட்டிக்கொள்வதைவிட, பேசவிட்டு வேடிக்கை பார்ப்பதே மேல் என்றவாறு, கம்பேனியில் ஃபிகர்களை பேச வைத்து பார்ப்பதற்காக தயார்செய்யட்ட டீஃபால்ட் டயலாக்கை ஃப்லோவாக அடித்துவிட்டேன்.
.
"யா இட்ஸ் குட். யுவர்ஸ் இஸ் இன்ட்ரெஸ்டிங், டெல் சம்திங் மோர்"

அவ்வளவுதான். 50 ாயிரம் சம்பாத்யம், மாதம் ஒரு முரை குடும்பத்துடன் டூர், புத்தகம், ட்ரைவிங் என்று பேஷன் முதல் பால்டிக்ஸ் வரை பேசி, நிம்மதியா இருக்கேன் மிஸ்டர் மனோஜ் என்று தன் 20 நிமிட உரையை முடித்தார்.

குப்பென வேர்த்துவிட்டது. 15,16 என்று 2,3 ஷிப்டுகளை ஓரே மூச்சில் செய்து கிடைக்கும் பணத்தையும், நோயையும் வைத்து அல்லல்படும் கேரக்டர்களின் மத்தியில், கேஷுவலாக கார் ஓட்டி வாழ்க்கையை அனுபவித்து கொண்டிருக்கும்  ஒருவரை பார்த்து போறாமை பட்டுக்கொண்டிருந்தேன். அவர் அதை கவணித்திருக்கக்கூடும்.
"Wait for your moment, You will face a situation of taking a yes or no decision in sometime. All you need to do is to answer it from your heart with an intention and will to take a risk to be happy"என்றார்.

ஒரு நிமிஷம் மெரசலாயிட்டேன். ஆண்டராய்டு மொபைல் 5 நிமிஷத்துல சார்ஜ் ஆனா கெடைக்குமே ஒரு சந்தோஷம். அதே சந்தோஷத்துடன் வீடு போய் சேர்ந்தேன்.