Tuesday, July 23, 2013

புதிதாக வலியை அறிய முற்படும் ஒருவன்

புதிதாக வலியை அறிய முற்படும் ஒருவன்...

அவன் கண்கள் மூடப்பட்டு நான்குவழிச்சாலையின் மையத்தில் விட்டதைப்போல் உணர்கிறான்,

அவன் பயம் எல்லாம் எப்படி அவன் அந்த சாலையை கடக்கப்போகிறோம் என்பதுதான்,

ஒருவேளை அவன் பேருந்தினாலோ,ஷேர் ஆட்டோவினாலோ இடிக்கப்படலாம்,

அல்லது யாராவது அவன் கண் கட்டை அவிழ்த்து விடலாம்,

இந்த அவசர உலகில் அப்படி ஒரு அதிசயம் நிகழ வாய்ப்பேயில்லை என்பதை அவன் அறிந்திருக்கவேயில்லை

புதிதாக வலியை அறிய முற்படும் ஒருவன்...

ஒரு சாத்தானின் கோயிலுக்கு சென்று,கடவுளை வணங்குகிறான்,

அவன் ஏமாறுகிறான் என்று தெரிந்து,சாத்தான் சிரித்துக்கொண்டிருக்கிறது,

அவன் அதை கடவுளின் அருள் என்று நினைத்து மீண்டும் ஏமாறுகிறான்,
மீண்டும் மீண்டும் ஏமாறுகிறான்,

புதிதாக வலியை அறிய முற்படும் ஒருவன்

தன்னை மீட்பதற்கான ஆட்களையோ அல்லது ஏதாவது ஒரு உதவியையோ எதிர்ப்பார்த்தபடியே உள்ளான்,

அவன் எதிரிகளும்,துரோகிகளும் அவனை மீட்பதுபோல் நடித்து நண்பர்களாகின்றனர்,

அவனுக்கு காட்டப்படும் கருணையால் அவன் அனைவரையும் நம்புகிறான்,அனைவரையும்...

புதிதாக வலியை அறிய முற்படும் ஒருவன்...

அந்த வலியில் இருந்து மீளும் போது

எந்த உன்மையுமே தெறியாமல் தன்னிடம் சிரித்து கை நீட்டுபவர்களிடம் செல்லும் குழந்தைபோன்றவன்,

அன்பால் சுலபமாக ஏமாற்றப்படும் காதலியைப் போன்றவன்,

எலிப்பெட்டியில் இருக்கும் உணவை உண்ணச்செல்லும் ஒரு எலி போன்றவன்,

என் வருத்தமெல்லாம்

அவன் இதற்குமுன் ஒரு குருடன் சாலையை கடப்பதை ஏன் கவனிக்கவில்லை என்பது,

அவன் ஏன் கடவுளிடம் சென்றான் என்பது,

அவன் ஏன் வலியுடன் சேர்த்து அனைத்தையும் மறந்தான் என்பதுதான்..

மீண்டும் ஒருமுறை அந்த வலியை அவன் கடந்துவரும்போது,
என்னைப்போல அவனும் ஒரு கவிதை எழுதுவான் என்பதில் சந்தேகம் ஒன்றும் இல்லை...ヅ


Wednesday, July 3, 2013

பைத்தியக் கவி !!

இவ்வளவு பெரிய உலகத்தில்,என்னை நம்பி வந்த உன்னை ஏமாற்றியது,
உன் சடலத்தின் கண்கள் பார்த்த பரிதாப பார்வையில்தான் தெரிந்துகொண்டேன்..

கற்பழிக்கப்பட்ட பெண்போல துடித்துக்கொண்டிருந்தாய்,

தனியே தவரவிடப்பட்ட குழந்தைபோல கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தாய்,

நான் இட்ட உணவு உன் குடலில் இறங்கியதா என்பதை கூட நான் அறிந்திருக்கவில்லை,

உன் கழுத்தை நெரித்தபடி, என் நண்பனுடன் சிரித்து பேசிக்கொண்டிருந்தேன்,

உன் கதறல் எனக்கு கேட்கவே இல்லை,

என் ஆசை எல்லாம் உன்னை ருசிக்க வேண்டும் என்பதே,

நீ துடிப்பதை நிறுத்த உன் தலையை ஓங்கி தரையில் அடித்தேன்,

வந்த வேலை முடிந்தவுடன்,உடல் முழுக்க கீரல்களுடன் உன்னை ஒரு பையில் அடைத்தேன்,

பின்பு உப்பு மிளகாய் தடவி தவாவில் வருத்தெடுத்து முட்களை நீக்கி ரசித்து ருசித்தேன்....

நீ ஒரு பெண்ணாக இருந்திருக்கும் பட்சத்தில் எதுவுமே தவாவில் நடந்திருக்காது....