Tuesday, January 21, 2014

பந்தய குதிரை

என்னை கை தட்டி உற்சாகப்படுத்திய பலர் ,நான் சில தூரம் சென்று திரும்பி பார்க்கையில் அவரவர் வேலைகளை கவனிக்கச் சென்றுவிட்டனர்.
 

நான் ஒரு பந்தய குதிரையாக இருந்திருக்கும் பட்சத்தில் வருந்தியிருக்கவே மாட்டேன்..!!!!

Sunday, January 19, 2014

அம்பேத்கரும், நேருவும் , கோபினாத்தும் ஏற்படுத்திய தாக்கம்:-P

"அட இன்றைய இளைஞர்கள் இவ்வளவுதான்" என்பதைப்போன்ற பதில் நீயா நானாவில் கோபினாத் கேட்ட "இரண்டு நிமிடம் நேருவை பற்றியோ,அம்பேத்கரை பற்றியோ பேசுங்கள்" என்ற கேள்வி அமைந்தது...
நிகழ்ச்சி முடிந்த மூன்றாவது நிமிடமே இன்டர்நெட்டில் அம்பேத்கரால் ஏற்பட்ட தாக்கத்தை படிக்க ஆர்வமாகயிருந்தேன்.

திடீரென்று நான் படித்த பன்னிரெண்டாம் வகுப்பு தாவரவியல் மற்றும் விளங்கியல் பாடப்பிரிவும், கல்லூரியில் நான் படித்த மின்ணணுவியல் மற்றும் தொடர்பியல் பாடப் பிரிவும், பின்பு மென்பொருள் நிருவணத்தில் Software இஞ்சினியராக வேலை கிடைத்ததும், அது தவறும் நிலையில் உள்ளதால் எனக்கு பிடித்தமான வன்பொருள் பிரிவில் தற்போது நான் பயின்று வரும் கோர்ஸூம், கோர்ஸ் கற்றுக்கொடுக்கும் வாத்தியார் உனக்கு எது சோறு போட போகுதோ அத மொதல்ல படிச்சி பொழப்ப பாருடா என்ற வார்த்தைகளும் நினைவிற்கு வருகிறது. சம்மந்தப்படாத நிகழ்வுகள் நிரைந்த ஒரு குழப்பமான பனிமூட்டத்தில் நான் எங்கு சென்றுகொண்டிருக்கிறேன் என்பது கூட தெரியாத ஒரு ஹெட் லைட் இல்லாத வண்டியில் பயணித்துக்கொண்டிருக்கும் போது  மின்னல் போல பளிச்சென வந்துபோனது ஒரு வெளிச்சம். அந்த வெளிச்சத்தில் எழுந்த சாதாரன கேள்விதான் இது "அப்பேத்கர்,நேருவ பத்தி தெரியலனு நான் ஏன் வெக்கப்படனும் ?
ஒருவேளை வாழ்நாள் முழுக்க அவர்களை பற்றி தெரிந்துகொள்ளாமலே இருந்தால் வெட்கப்படலாம்.

வரலாறுகளை கற்றுத்தறாமல், வரலாறு படைக்கக் கற்றுத்தாருங்கல் என்ற ஒரு கும்பலும் இங்குதான் இருக்கிறது, வரலாறே தெரியல நீயெல்லாம் காலேஜ் எதுக்கு படிக்குற என்ற கும்பலும் இங்குதான் இருக்கிறது.
இவர்கள் இருவரும் தனித்தனியே பேசும்போது வரலாறை விடுத்து வரலாறு படைக்கவேண்டும் என்ற எண்ணமும் வருகிறது, வரலாறு முதலில் படிப்போம் , பிறகு படைப்போம் என்ற எண்ணமும் வருகிறது.
ஒருவேளை கோபினாத் அப்பார்ட்மென்டுகளில் துணிகளை விற்றுக்கொண்டிருந்த காலம் மாறாமல், தொலைக்காட்சியில் வாய்ப்பு கிடைக்காமல் இன்னமும் அதே நிலையில் இருந்திருந்தால் அவருக்கும் அம்பேத்கர்,நேருவெல்லாம் Bore ஆகி இருக்கும்.

Tuesday, January 14, 2014

ஆர்வக்கோளாறு

சில நாட்களாக எனக்கு புத்தகம் படிக்கும் ஆர்வம் பெருவிட்டது . வீட்டில் அம்மா முதல் தங்கை வரை "ஏன்டா நைட்டெல்லாம் கதை புக்க படிக்கிறேன்னு  லைட்ட போட்டு தூக்கத்த கெடுக்குற, இந்த ஆர்வத்த பாட புத்தகத்துல காட்டி இருந்தா இந்நேரம் டிகிரி வாங்கியிருக்கலாமே " என்று புலம்பியபடியே உள்ளனர்...

வாஸ்த்தவம்தான் இருந்தாலும் எப்படி இதுபோன்ற புத்தக ஆர்வம் பெருகியது  என்று ஆராயந்ததில் கிடைத்த பதில் இதுதான்.
சிறுவயது முதலே எங்கள் இட்லி கடையில் பொட்டலம் மடிக்க தேவையான பேப்பர்களை கிழிக்கும் வேலை என்னுடையதுதான்..அவ்வப்போது கண்ணில் படும் ஹீரோயின்களின் ஹிப்பை திருட்டுத்தனமாக பார்ப்பதோடு கிசு,கிசுக்களையும் அங்கொன்றும் இங்கொன்றுமாக விளையாட்டு செய்திகளையும் படிப்பதுண்டு.
சிலநேரங்களில்10 கிலோ பேப்பர்களை கூட ஒரே மூச்சில் கிழித்ததுண்டு.
நமக்கு எதில் ஆர்வமோ அதில் இருந்து படிக்க ஆரம்பித்தால்தான் புத்தகம் படிக்கும் பழக்கம்  சுலபமானதாகும்.

"விதை சேற்றில் இருக்கிறதே என்று கவலைப் படவேண்டாம், கண்டிப்பாக கனி கிடைக்கும்"

Monday, January 13, 2014

ஒரு இருட்டு அறை

ஒரு இருட்டு அறை

அது நம்மை முழுமையாக விழுங்கி விடுகிறது,
அவ்வளவு எளிதாக நம்மை வசப்படுத்துகிறது,
நமக்கு தேவையான ஏதோ ஒன்றை தருவது போல நம்மை ஏமாற்றுகிறது,
சில நேரங்களில் தவறுகளை செய்வதற்கு ஏதுவான இடமாகி விடுகிறது,

ஒரு இருட்டு அறையில்

முனகல் சத்தங்கள் கேட்கிறது,
ஒரு அழுகுறல் கேட்கிறது,
ஒரு கடத்தப்பட்ட குழந்தையின் கதறல் கேட்கிறது,
சில பூச்சிகளின் கிரீச் சத்தம் கேட்கிறது,
அதன் வாசனை ஒரு பயத்தை ஏற்படுத்துகிறது,

ஒரு இருட்டு அறையால்

பல பசிகள் தீர்க்கப்படுகிறது,
ஒரு கடத்தல் கும்பல் சில மாதங்களுக்கு நிம்மதியாய் வாழ முடிகிறது,
மந்திரவாதிகள் பேய் கதை சொல்லி பிழைக்க ஏதுவாகிறது,

இந்த இருட்டு அறையில் ஜன்னல்கள் கிடையாது,
கதவுகள் வெளிப்பக்கமாக தாழிடப்பட்டுள்ளது,இங்கு வெளிச்சம் எப்படி வரப்போகிறது என்றே தெரியவில்லையே என்று உள்ளிருப்பவர்கள் தங்கள் கண்களை மூடிக்கொண்டே இருக்கின்றனர்...