Thursday, July 31, 2014

பாழாய்ப்போன நினைவுகள்

எதற்காக இந்த மனம் பாழாய்ப்போன நினைவுகளை மட்டும் கிலரியபடியே இருக்கிறது ?
பாழாய்ப்போன நினைவு, ஒரு சாத்தான்.
அது ஒரு மந்திரத்தை ஓதிக்கொண்டே இருக்கிறது,
எல்லா இன்பத்தையும் ஒட்டுமொத்தமாக விழுங்கிவிடுகிறது.
எனக்கு ஆறுதல் தருவதுபோல், என்னை ஒரு மாயக் கம்பளியில் போர்த்துகிறது, பின்பு யாருக்குமே தெரியாமல் என் கழுத்தை நெறிக்கிறது.

பாழாய்ப்போன நினைவுகள் ஒரு வேசி.
அதன் அந்தரங்கங்களை காட்டி, நம்மை அதனுடனேயே இருக்க செய்கிறது,
இரவு நேரங்களில் நம் தூக்கத்தை ஒட்டுமொத்தமாக தின்றுவிடுகிறது.
அதன் பசியை நம்மால் போக்கமுடிவதே இல்லை, அது மீண்டும் மீண்டும் நம்மையே திண்றுதீர்க்கிறது.

இந்த பாழாய்ப்போன நினைவுகள் எல்லாம் கல்லறைகளாக மாறி, ஒரு பெரிய இடுகாடை உருவாக்குகிறது, மேலும் மேலும் பிணங்கள் குவிவதைப்போல, பாழாய்ப்போன நினைவுகள் குவிகிறது. அது ஒரு அடையாளமாக மாறி, காலப்போக்கில் ஒரு பெரும் பயத்தை உண்டாக்குகிறது.
நினனவுகள் பேய்களாக அலைகிறது. பேய்களுக்கு சாவே கிடையாதாமே. அது மேலும் ஒரு பயதத்தை உண்டாக்குகிறது...

Sunday, July 6, 2014

தனுஷ்கோடி


இன்னும் அங்கு 500க்கும் அதிகமானோர் 2 கிராமங்களாக
வசிக்கிறார்கள் என்பதை பார்த்தபோதும் அவர்களின்
வாழ்க்கை முறையை தெரிந்துகொண்ட பிறகுதான் உன்மையான சோகம்
குடிகொண்டுவிட்டது. தவிர்க்கமுடியாத
வலி ஒன்று பாரமாகி இதயத்தை கனமாக்கிவிடுகிறது.

ராமேஸ்வரத்திலிருந்து சுமார் 20 கி.மீட்டர் சென்றால்
தனுஷ்கோடியை அடைந்து விடலாம். மழைக்காலங்களில்
படகு மூலமாகவும்,மற்ற நேரங்களில் Van மூலமாகவும்
சென்றுவிடலாம். அத்தனை மக்கள் வாழும் இடத்தில் வெறும் 5
சோலார் விளக்குகள் பொருத்தப்பட்டதாம் (அம்மா அவர்களின்
ஓட்டு கேட்கும் தருனத்தில் மட்டும், அதில்
மூன்றை கழட்டிக்கொண்டுவிட்டதாகவும் கூறினார்கள அங்குள்ள
மக்கள்). கோடைக்காலங்களில் பாடம் சொல்லிக்கொடுக்க சுமார் 5
கி.மீட்டர் பாவப்பட்டு வழி விடும் கடலின் மணல் மார்க்கமாக
ஆசிரியர் பாடம் சொல்லிக்கொடுப்பது வழக்கமாம். வரும்
வழியில் Van கிடைத்தால் ஏர்றிக்கொள்வார்களாம். சில
நேரங்களில் பணம் எங்களிடம் வாங்கிக்கொண்டு எதற்காக
கண்டவர்களை ஏற்றுகிறீர்கள் என்று மக்கள் ஏசும் நிகழ்வும்
நடக்குமாம். மழைக்காளங்களில் எங்களை கண்டுகொள்ள யாரும்
இல்லை என்று என்பதை கேட்கும்போது,
தொப்புள்கொடியை அறுத்து விட்டு அனாதையாய் கதறி அழும்
குழந்தையின் ஏக்கக்குறல் கேட்பதைப்போலவே இருக்கும்.

தனுஷ்கோடி அழியும்முன் இருந்த கட்டிடங்கள், வீடு வாசல்கள்,
படகுகள், கோவில்கள் எல்லாம் யாரையோ பரிகொடுத்ததைப்போல,
எதையோ நினைத்து அழுவதைப்போல, யாருடைய
வருகைக்கோ காத்திருப்பதைப்போல தோற்றுவிக்கும். அங்குள்ள
பள்ளியில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கிறார்களாம்,
அவர்களின் பொழுதைப்போக்கிக்கொள்ளும் முறையைதான்
தேடத்தோன்றியது, என் மொபைலில் சிக்னல் இல்லாமல்
தூக்கிப்பிடித்துக்கொண்டிருந்த நேரத்தில்.

இன்னும் பல சுவாரஸ்யங்களை அடக்கிவைத்துக்கொண்டு அமைதியாக
உறங்கிக்கொண்டிருக்கும் உயிருள்ள பிணம் போன்ற இடம்தான்
தனுஷ்கோடி. பாவத்தை கழிக்க அடித்து மாண்டு 22 கிணருகளில்
இருந்து தண்ணீரை மொண்டு ஊற்றி குளிக்கும் மக்களின் பேராசைப்
பேய், இவர்கள் என்ன பாவம் செய்திருக்க முடியும்,
அதை எப்படி கழிக்க முடியும் என்ற ஒருகேள்வியை மட்டும்
தவறாமல் கேட்கும்.

ஒருவேளை முக வடிவமுள்ள தமிழகத்தின் வாய்
அண்டை நின்று மீனவர்களை சுட்டுக்கொல்லும் நிகழவுகள்
நினைவுக்கு வந்தால்
எச்சிலை குழப்பி கடலைப்பார்த்து துப்பிட மறக்காதீர்கள்.