Friday, October 31, 2014

அவன்தான்டா நானு.....

அவன்தான்டா நானு.....

"என்ன எழவுடா இந்த கார்ப்பரேட் கல்சர்" என்று தலையில் கை வைத்து புலம்பும் சிச்சுவேஷன் இவ்வளவு சீக்கிரம் வரும்னு சத்தியமா நினைக்கல.

கம்பேனி வாசப்படிய மிதிக்குறப்ப, கழுத்துல மாட்ற ஐடி கார்டுக்கும், யானையோட கழுத்துல மாட்ற "கிலிங் கிலிங்"னு சத்தம்போடுற மணி'க்கும் ஒன்னும் பெரிய வித்யாசம் இல்ல. எந்த கதவுல நுழையனும்னாலும் "நான்தான் வந்துருக்கேன் கதவு தொற"னு பொண்ணாட்டிக்கிட்ட சொல்றா மாதிரி ஐடி கார்டை காண்பித்து "கொய்ங்"னு சத்தம் எழுப்பினால்தான் உள்ளையே அனுமதிக்கிறது. உள்ளே நுழையும்போதே "ஹே வாஸ்ஸாப் டூட்" என்று ஆரம்பிப்பதிலிருந்து , ஐடி கார்டை கழட்டி வைத்துவிட்டு வீடுதிரும்பும் வரை முழுவதுமாக நடிக்கவேண்டியிருக்கிறது. கொடுக்கப்படும் சம்பலத்தில் பாதியை "cafetaria"விலேயே செலவழிக்கவேண்டியிருக்கிறது. யூனிக்காக இருக்கலாம் என்று முயர்ச்சித்தால் நம்ம பாச்சா பலிக்கவே பலிக்காது. பெண்களிடம் ஆல்வேஸ் அவைலபலாக இருப்பவர்களும், நுனி நாக்கில் இங்கிலீஷும், தலையில் கண்ட கருமத்தை தடவி நீட்டியும், சுருட்டியும் வைத்துக்கொள்வதும்தான் அங்கு யுனிக்கே(அந்த எழவுதான் நமக்கு வராதே).
தனியாக தெரிய வேண்டுமென்றால் நானாகச்சென்று "இங்க, கருப்பா, குண்டா, சுருட்ட முடி வச்சிருப்பாரே, அவர தெரியுமா என்று கேட்டு, அவன்தான்டா நானு" என்று அரிமுகப்படுத்திக்கொண்டால்தான் உண்டு.

வீடுதிரும்பி அரைக்கால் ட்ரௌசரையும், கட் பணியனையும் மாட்டிக்கொண்டு, கம்பேனியில் நடக்கும் அட்ராசிட்டியை நினைத்தால் எனக்கான கதாப்பாத்திரம் என்னவென்றே தெரியாமல் கம்ப்யூட்டர் முன் ஊமையாக நடித்துக்கொண்டிருக்கிறேன்.இதில் இருக்கும் ஒரே ப்ளஸ் பாய்ண்ட் சொந்த பந்தகங்கள் கிட்ட பீத்திக்கொள்வது மட்டும்தான் :P

Friday, October 24, 2014

தாய்ப்பாசம்

பற்கள் இல்லாத குழந்தையின் பவள வாயில் தன் கண்ணத்தில்
செல்லக்கடி வாங்கிகொண்டு , "ஆ"வென
கத்தும் தாயைப்போல் வேறுயாரும்
இன்பத்தை அனுவித்துவிடமுடியாது.

Thursday, October 23, 2014

தேவதை

ஒத்த ஜட,
ஒரே ஒரு பூ,
கண்ணுல மை,
தொங்குற கம்மல்,
நெத்திக்கேத்த பொட்டு,
கண்ணக் குழி,
மேல்வாக்கில் வலைந்திருக்கும் கண் முடி,
பளிங்குப்பல்,
சிவந்த கீழுதடு,
கழுத்தின் வியர்வையில் கிடக்கும் அந்த ஒற்றை சங்கலி,
காற்றில் அடிக்கடி கலைந்து போகும் அந்த 15 சென்டிமீட்டர் முடி,
நளின நடை,
குட்டித் தொப்பை,
பார்க்கத் தூண்டாத கவர்ச்சி,
பார்த்தவுடன் ஏற்படுத்தும் மகிழ்ச்சி,
ப்ளூ சுடிதார்,
உள்வாக்கில் மடக்கி பார்க்க ஒரு கைக்கடிகாரம்.

தேவதை