Sunday, October 20, 2013

மண் வாசனை

கடற்கரைக்கு செல்வது வழக்கம்,
கருமேகத்தை இழுத்து வரும் காற்றின் சத்தம் கேட்டது,
கரையை அடைய போட்டியிடும் அலைகளின் சத்தம் கேட்டது,
குமுறுக்கொண்டே வரும் மேகத்தின் சத்தமும் கேட்டது,
சரி சுண்டல் சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது,
பக்கத்திலேயே ஒரு பெண்ணின் குரல் ,
பழக்கப்பட்ட குரல், வெகுநாட்கள் பழகிய குரல்,
ஏதோ ஒன்று என்னை கவனிக்கவிடாமல் செய்தது,
அவளே கவனிக்கட்டும் என்று சத்தமிட்டு கடைக்காரனை சுண்டல் கேட்கிறேன்,
சற்றும் கவனிக்காதவளைப்போல் சென்றுவிட்டால்...
ஒரே மழை அடிக்க ஆரம்பித்துவிட்டது,
நானும் வீடு திரும்பிவிட்டேன்.

ஏன் மழையில் மண்வாசனை நம்மை மகிழ்ச்சியடைய வைக்கிறது என்று நான் யோசித்ததேயில்லை ??
சிலவற்றை ரசிப்பதோடு நிருத்திக்கொள்வதுதான் சுகம் என்று உணர்ந்தேன்.

கனவு மரம்...

காற்றடித்தால் கைதட்டுவதுபோல் சத்தம் தரும் ஒரே மரம் அதுதான்.
நான் ஒரு ராஜாவாக,
மக்கள் போற்றும் நாயகனாக,
ஒரு அரசியல்வாதியாக,
காதலியை க்ளைமேக்ஸில் கரம் பிடிக்கும் ஹீரோவாக,
ஆக ஆசை வந்தால் அதன் நிழலில் தான் உறங்குவேன்..:-)
ஒரு "அரச" மரத்தின் அடியில் என்றாவது நீ உறங்கியது உண்டா ??

Wednesday, October 16, 2013

காதல் மேகம் ♥

மேகத்தை வரைந்து அனுப்பும் ஓவியனாக மட்டும் எனக்கு வேலை கிடைத்தால், உன் வீட்டு மொட்டைமாடியை கடக்கும் அனைத்து மேகங்களுமே ♥♥ வடிவுதான்.

ஒரு பயணம்

என்னிடம் திசைகாட்டி இல்லை,
விசைப்படகு இல்லை,
பாய்மரம்கூட இருந்திருக்கவில்லை...

அது எப்படி கண்ணுக்குத்தெரியாத ஒன்றை இலக்காய் வைத்து நான் பிரயாணத்தை தொடங்கினேன் என்பது இன்று வரை எனக்கு புரியவேயில்லை.
வெறுமனே தன்னம்பிக்கையைக் கொண்டு இலக்கை அடைந்துவிடமுடியுமா என்ன ??