Monday, January 25, 2016

த்ஹன நன தனா நானா

டாலியின் சர்ரியலிசம் பற்றிய எஸ்.ரா வின் கட்டுரைத்தொகுப்பை புறட்டிக்கொண்டிருந்தேன். டாலியின் ஓவியம் சர்ரியலிசத்தை சார்ந்தது. அதாவது, நிஜங்களை நொடிப்பொழுது நிருத்தி, ஓவியமாய் காண்பிக்கும் முறையில் இருந்து சற்று மாறி, கணவுகளில் கிடைக்கும் குழப்பமான உருவங்களை, காட்சிகளை உரையவைத்து படமாக்கும் முறைதான் "சர்ரியலிசம்". இவரின் கலைத்திறனை ஓவியத்தோடு நிருத்திவிடாமல், திரைப்படம், இலக்கியம் என்று எல்லாவற்றிலும் புறட்சியை ஏற்படுத்தியவர். "An Andalusian dog" என்ற குறும்படத்தின் காட்சிகள் மிகப் பிரபலமானவை. ஒரு மனிதன் நன்கு தீட்டிய ரேசரைக் கொண்டு ஒரு பெண்ணின் கண்ணை கிழிப்பதுபோல் ஆரம்பித்து, அதே பெண் ஒரு ஆணுடன் காதல் செய்வதுபோல் காட்சிகள் மாறி, தன்அக்குளால் ஆணின் முகத்தை தடவி, கடற்கரையில் உருண்டு பின்பு மணலில் புதைவது போன்ற தொடற்பற்ற காட்சிகளின் கோர்வை அது. இவருடைய குறும்படங்களின் சில காட்சிகள் புத்தகத்தில் ஆங்காங்கே இடம்பெற்றிருந்து. ஒரு பெண்ணை மடியில் கிடத்தி, மறைக்கப்பட்ட போனியில் எதையோ தேடுவது போன்ற ஒரு காட்சி. கன்டென்ட்டும், கான்சப்படும் கட கட வென சென்றுகொண்டிருந்ததால், புத்தகத்தை புரட்டிக்கொண்டே இருந்தேன். கில்மா படங்களை, கிழடு கட்டை ஒன்று ஓரக்கண்ணில் பார்த்துக்கொண்டிருந்ததை கவணிக்கவில்லை. படித்து முடித்து தாம்பரத்தில் தலை தூக்கினால், பரிவன்பான பார்வையுடன் என்னை பார்த்துக்கொண்டிருந்தார். ஏதோ ஒரு ஒளிவட்டம் தெரிந்திருக்கும் போல. தம்பி எங்க வேல பாக்குறீங்க என்று விசாரிக்க ஆரம்பித்துவிட்டார். பாவம் நல்லவன்னு நம்பி ஏமாந்துருச்சு. புத்தகம் படிப்பது அவ்வளவு பெரிய புண்ணிய காரியமா என்று சிரித்துக்கொண்டேன். மகாதேவகிகள் வாழும் இந்த காலத்தில் போய்.......

Saturday, January 23, 2016

டோன்ட் பீ எ டம்ப் ஆஸ்

நம்மை முட்டாள்களாக்கும் கான்வர்சேஷன்கள் அக்கம் பக்கத்தில் நிகழ்ந்தால், இரண்டு விதமாக நீங்கள் அதை கவினிக்கலாம். ஒன்று, அமைதியாக வேடிக்கை பார்ப்பது, இரண்டு, கான்வர்சேஷன்களில் ஈடுபட்டிருப்பவர்களின் முட்டாள்தனத்தின் வீரியத்தை தெரிந்துகொள்ள அவர்களை தூண்டி விட்டு பேசவைத்து அழகுபார்ப்பது. சமீபத்தில் சிங்கப்பூரில் இருந்து வந்த மேனேஜரின் கார்டை தேய்த்து 15 பேர் கொண்டகுழு கழுத்துவரை தின்றுதீர்ப்பதற்காக பிரயாணித்துக்கொண்டிருந்தோம். வழியில் எங்கள் உயர் அதிகாரிகள் விவசாயத்தை பற்றி பேச ஆரம்பித்தார்கள். கேள்விக்கே பிறந்த டி.எல் சடாரென்று திரும்பி
"Do u know how much farmers are getting fr an acre of wheat ?"
"Do u know why farmers are killing themselves ?"
"Do u know why people are migrating from village to city ?"
என்று வழக்கம்போல தெரியாத கேள்வியை அதிகாரத்தொனியில் கேட்க, "அன்ட் தி கேம் பிகின்ஸ்" என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு நமுட்டுச்சிரிப்புடன் "நோ ஐடியா" என்று பதிலளித்து வேடிக்கைபார்க்கத்தொடங்கினேன்.

பெருங்களுத்தூர் ஏரிக்கரையை நோக்கி கைநீட்டி "Why the people have sold these farming lands ?" என்று ஆரம்பிக்கும்போதே தெரிந்துவிட்டது(ஏரில ஏதுடா விவசாய நிலம் ?), வழக்கம்போல வடை சுட ஆரம்பித்துவிட்டார் என்று.
"எ டம்ப் கான்வர்சேஷன்" என்று காரில் இருந்த ட்ரைவர் உட்பட முகம் சுழித்திருப்பார்.

"நாம் முட்டாள்கள் என்பதை யாருக்கும் தெரியாதபடி நடந்துகொள்வதில்தான், நம்முடைய அறிவாளித்தனமே இருக்கிறது." கன்டென்ட் தெரியாத டாப்பிக்குகளில் தேவையில்லாமல் வாயை கொடுக்காமல் இருந்தாலே பெரும்பாலும் இதைபோன்ற சம்பவங்களை தடுத்துவிடலாம். அதுவும் இந்த ஐ.டி கம்பேனியில் ப்ரமோஷன்களும், ஊதிய உயர்வும் கிடைக்கவேண்டும் என்றால் உங்கள் தலையை சுற்றி ஒரு ஒளிவட்டம் இருந்துகொண்டே இருக்கவேண்டும். "ஓ!! இவனா, இவன் கெத்துப்பா" என்று ஊரையே நம்ப வைக்கவேண்டும். திறம்பட இதைச்செய்தாலே ஏகபோகமாக வாழலாம்.

Saturday, January 9, 2016

"வாரம் நாலு மணிநேரம் வேல" - டிம்மோதி ஃபெரிஸ்

"What we fear doing most is usually what we most need to do"

"ஃபோர் ஹவர் வர்க் வீக்" என்ற புத்தகம். தொழில் தொடங்குவதற்கான மனநிலையை உருவாக்கும் விதிகள், எடுத்துக்காட்டுகள், விளையாட்டுகள் என்று மிரளவைக்கும் வேகத்தில் நகர்ந்துகொண்டே இருக்கும். அதில் பயத்தை போக்குவதற்கான விளையாட்டாக, யாரென்றே தெரியாத எதிர்பாலினத்தின் கண்களை உற்றுப்பார்த்து பழகுவதும், கான்டாக்ட் நம்பர் வாங்குவதும் அடக்கம். ("எந்த தொழில் தொடங்கடா இந்த மாரி விளாட்ட விளாடனும்" என்று கேட்கும் அதிமேதாவிகள் அமைதிகாக்கவும்)

இருக்கும் வேலையை விடவும் கூடாது, பணமும் வேண்டும், மற்றவர்களிடம் கை கட்டி வேலை செய்யவும் பிடிக்கவில்லை, தொழில் தொடங்க பணமோ, அனுபவமோ இல்லை, வேலையை விட்டுவிட்டு தொழில்சார்ந்த படிப்புகள் படிப்தாக ஊசிதம் இல்லை. ஆனால் "ஏதாவது பண்ணியே தீர வேண்டும்" என்ற மனநிலையை மட்டும் வைத்துக்கொண்டு சுற்றித்திரியும் எதிர்கால பிரபலங்களுக்கான புத்தகம்தான் இது. அன்றாடம் நமக்கான பயத்தையும், தயக்கத்தையும் போக்கிக்கொள்வதே, புத்தகத்தின் பேசிக் விதி.

ரோட்டிலோ, அலுவலகத்திலோ அழகான பெண் ஒருத்தியை பார்க்கிறீர்கள், "செம்ம்ம அழகா இருக்கா'ல" என்று உங்களுக்குள் கேட்டுக்கொண்டு, அவள் கண் உங்களை பார்த்த மாத்திரத்திலேயே, யோக்கிய புருஷர்களைப்போல் ஃபோனை நோன்டிக்கொண்டு நகர்ந்துவிடுகிறீர்கள். பயமும் தயக்கமும் தகர்த்தெரிய ஒரு முறை, நீங்கள் அப்படி பார்த்த பெண்ணிடம் பேசி, தொலைபேசி எண்னை கேட்க முடியுமா ? உங்கள் நோக்கம் நம்பர் வாங்குவது அல்ல, பயத்தை போக்குவது. அவ்வளவே. உங்களுக்குக்கான ஸ்கிரிப்டையாவது படித்து ஒப்பித்து முயர்ச்சி செய்யுங்கள் என்று

"Excuse me. I know this is going to sound strange, but if I dont ask you now, I ll be kicking myself for the rest of the day. I am running to meet a friend, but I think you are really cute. Could I have your phone number ? I am not a psycho-I promise. you can give me a fake one if you are not interested"

ஸ்கிரிப்டையும் கொடுத்து விளையாடிக்கொண்டே போகிறது புத்தகம்.

வொர்த்து ரீடிங் பட்டியலில் இதுவும் ஒன்று.