Tuesday, January 6, 2015

கொலைகாரக்கிணறு

தற்கொலை செய்வதற்காக ஒருவன் கரும்புத்தோட்டத்தில் மழைக்காலத்தின் ஒரு காலை வேளையின் அமைதியான சூழலில் கிணற்றிற்கு புறப்படுகிறான்.

அது ஒரு 20 அடி நீளமும், அகலமும் கொண்ட கிணறு.
மழைக்காலத்தின் தொடக்கம் என்பதால் அவ்வளவாக கிணறு நிரம்பியிருக்கவில்லை,
கருங்கற்கள் சொருகப்பட்டு , கீழிறங்க பாதைகள் அமைக்கப்பட்ட பாசிகள் பூத்த பாழடைந்த பச்சைக் கிணறு அது.
வயல்பூச்சிகளின் "க்ரீச்" ஒளி கிணறு முழுக்க பரவிக்கிடந்தது.
ஒரு சிட்டுக்குருவி அந்த படிக்கட்டின் ஓரத்தில் நின்று தன் தலையை நனைத்து, சிலிர்பிவிட்டு பறக்கிறது. அவன் அந்தப் பறவையை தற்கொலை செய்யத்தெரியாத கோழையாகப் பாற்க்கிறான்.
வானம் வெம்பத்தொடங்கிவிட்டது. "க்ரீச்" ஒளியுடன் "சலசலப்பு"ச் சப்தமும் கலந்துகொண்டது,

எண்ணங்களை அப்படியே பலமடங்காக பிரதிபலிக்கும் இந்த கொலைகார கிணறுகளின் சூழ்ச்சமங்களை அவன் அறிந்திருக்கவில்லை.

அது அவனுக்கு மட்டும் கேட்கும்படி ஒரு மந்திர அழைப்பை ஓதிக்கொண்டிருக்கிறது.

வலியே இல்லாமல் இறந்துவிடலாம் என்று யாரோ அவனை ஏமாற்றியிருக்கிறார்கள்.

தான் சாவதைப்பற்றியோ, அதனால் ஏற்படும் வலியைப்பற்றியோ, அவன் பயந்திருக்கவேயில்லை,

தற்கொலை செய்துகொள்பவர்களை அவ்வளவு அன்புடன் அனைத்துக்கொள்கிறது அந்த கிணறு,

தலையைக்கோதி முத்தமிட்டு கட்டிலில் கிடத்தும் ஒரு வேசியைப்போல, அவனை கிணற்றில் விழவைக்கிறது.

அவன் உயிரை உரிஞ்சூம் வரையில் சலசலவென்று சத்தம்போட்டு சிரித்துவிட்டு,
உரிஞ்சியபின் அமைதியாக உறங்கிவிட்டது.

வயலில் சுற்றித்திரிந்த தவளை ஒன்றை, இப்படித்தான் அது ஏமாற்றியிருக்கிறது.

தண்ணீரில் தற்கொலை செய்யத்தெரியாத அந்த தவளை பிணங்களை எண்ணிக்கொண்டு காலத்தை கழிக்கிறது.
"ட்ரா" "ட்ரா"
இதுவரை 27..