Monday, March 10, 2014

வேர்க்கடலை(2)

முரளிக்கு தனிமை பிடிக்கும், வீட்டில் மங்கலத்தின் புலம்பல், அரைத்துக்கொண்டிருக்கும் மாவு மிஷினைப்போன்றது. வீட்டில் இருக்கும் இன்டு, இடுக்கு, மூலை முடுக்கு என்று எதையும் விட்டுவைக்காது. இதனாலேயே முரளி மாடிக்கு போய்விடுவது பழக்கம். அவன் மாடிக்கு போவதற்கான இன்னொரு காரணம் சுடுகாட்டில் தங்கியிருக்கும் வெட்டியான் குமார்.

முரளியின் வீட்டு மாடியிலிருந்து பார்த்தால் ஒரு பக்கம் கடலும், இன்னொரு பக்கம் சுடுகாடும் தெரியும். சிறுவயது முதலே அங்கு வெட்டியானாக இருந்து வருபவன் குமார். "பாட குமாரு" என்பது அவனுடைய செல்லப்பெயர். சுருள் முடி,அழுக்கான வெள்ளை வேட்டி, ஆரஞ்சு நிற கோடுபோட்ட சட்டை, நைந்து போன மங்கிய சிகப்பு நிற துண்டுமே அவனது சொத்து. இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வேட்டியை மட்டும் மாற்றிக்கொள்வான். சிறுவயதுமுதலே சுடுகாட்டில் இறந்துவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் அலுவலக கட்டடத்திலேதான் வசித்து வருகிறான்.

அவன் சிறுவயதில்  சுடுகாட்டில் வீசப்பட்ட காலத்தில் அங்கு அலுவலக பணியாளராக இருந்த சுந்தரம் தான் அவனை எடுத்து வளர்த்து எழுதப்படிக்க கற்றுக்கொடுத்தார். பிணம் வரும் நேரங்கள் போக மற்ற நேரங்களில் அப்போது வெட்டியானாக இருந்த தம்புடாவிடம் சில பல பாடல்களை கற்றுக்கொள்வான்.

தம்புடா 70 வயதானவர் என்பதற்கான அறிகுறியே தெரியாது, வாய் திறந்து பேசத்துவங்கினால் மூன்றில் ஒருவார்த்தை கெட்ட வாரத்தைதான் பேசுவார். அவர் பிணங்களை பார்க்கும் விதம் விசித்திரமாக இருந்தது குமாருக்கு. உறவினர்கள் பாடை கட்டி மாலை மறியாதையோடு சுடுகாட்டிற்கு கொண்டுவந்து எறிப்பதற்காக பிணத்தை விறகு கட்டைகளினூடே வைத்த பிறகு,  தம்புடா பாடும் தேவாரப் பாட்டை கேட்க கேட்க விறகுகள் கூட கண்ணீர் விடும். தம்புடா பிணத்தை அவர்கள் உறவினர்களுக்கு முன்னே அவமறியாதையாக பேச மாட்டார். வயதானவர்களை அண்ணன், தங்கை என்றும் இளைய பருவத்தினரை பிள்ளை, பெண்டு என்றும், குழந்தைகளை பேரன், பேத்தி என்றுமே அழைப்பார். சிலநேரங்களில் பாடல் பாடும்போது அவரும்கூட அழுதுவிடுவார். பாடல் முடிந்து பிறகு ஒரு சிறுசடங்கு நடப்பது வழக்கம், இறந்தவர்களின் வாய்க்கு அரிசி போட்டு பக்கத்தில் இருக்கும் குவளையில் உள்ள நீரால் தலைக்கு பின்னால் நீரைச்சொட்டவிட்டு தன்னிடம் இருக்கும் சில்லரைகளை அரிசி எடுத்த பையில்போடுவது. இவரின் பாடல்களில் இருக்கும் கனத்த சோகத்திற்காகவே சில்லரைகளை அதிகம் போடுவார்கள். இவற்றை எதற்காக செய்கிறார்கள் என்பது குமாருக்கு தெரியாது, ஆனால் சில்லரைகள் விழுவதைப்பார்க்க குமாருக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.அத்தனை சில்லரைகளும் குமாருக்குதான் என்று தம்புடா ஏற்கனவே கூறியிருக்கிறார்.

பிணங்கள் வரும் ஒவ்வொரு நாள் இரவும் தம்புடா இரண்டு கட்டு காஜா பீடி, குடிப்பதற்கு சரக்குகள், மிச்சர் பாக்கட்டுகளை கொண்டுவந்து குமாரிடம் புலம்புவது வழக்கம். இறந்தவர்கள் மட்டும் தம்புடாபேசுவதை கேட்க்க நேர்ந்தால் இவரை பழிவாங்கவே மறுஜென்பம் எடுப்பார்கள் என்று நினைத்துக்கொள்வான். அண்ணன் தங்கை என்று அழைத்தவர்களை தேவிடியா மகன், மகள் என்று கரித்துக்கொட்டுவார் தம்புடா.

-தொடரும்

Saturday, March 8, 2014

LINKEDIN

It is a post which would make u to be an active member in Linkedin. To your perusal, I am not a hired advertiser for linkedin but with the information Which i am gonna share, there are chances for you to get hired with what you have in your profile.

                                                         -----------LINKEDIN------------

We would have known facebook probably in the year 2006 or 2007. It took a major part of our life like a friend who keeps on entertaining us. A recent statistics shows that 80% of the facebook profile replicates a true character of a person. Though It is true, we are not gonna get any job with that.
What do u need to show yourself a proffesional person ??. It is simple. Join today in Linkedin. It was started in 2003. The purpose of linkedin is to connect the proffessionals. Let me tell you a scenario which was told by my brother who is current working as a recruiter in a company.

Recruiters used to buy an employer id from the  job portal sites like monster,naukri etc.. at the cost of around a lakh per annum  Using that employer id, employer's can get resumes or CVs from the job portal by filtering it with some appropriate searching terms. For the freshers or for  BPO voice processing positions, their way of choosing a canditate for an interview is to check  the English fluency.
But for a profile which is having more weightage and for the profile which needs an experienced canditate, the recruiters way of filtering is different. They cannot blindly believe you just by the words which are in your resume. They will search your profile and crosscheck that with your linkedin account.
Surprised !!! Yes, Using a premium account they can view our profile.

Osborne says: "Advice I would give for students getting LinkedIn is to make sure it is up to date with
their activities, achievements, grades, involvements in societies, passions, interests and career goals.
"Have regular updates on your profile. Think of it like facebook in that sense. Your activity updates are
like a beacon of flashing information disseminated out across your network;– as it's not only your
contacts that see this but their contacts too."

You may have a question that how the recruiters cross check and believe in our Profile information.
Let me tell you some terms which is familiar in Linkedin.
*Connection
*Experience
*Summary
*Certifications
*Educatinal qualification
*Skilks
*Endorsement
*Interest and some other information too.

"Connections" is similar to "friends" in FB. Having connections in a field you are in might help you more.

Experience and summary are  the must to make your profile a perfect one.


 You must add all the skills in your profile because without that no one can endorse you. Endorsement means recognising others skills. If u r endorsing a person's skills, it implies that you are recognising his skills. More the endorsements you have, the more your weightage of your profile.


With these above mentioned details recruiters can easily know about you more than with your resume.
Your updated profile equals your online CV.
You can search job in linkedin too by searching  with the designation or company name etc.. Once you saved your job, the employers can view your profile.

There are groups similar to facebook where you can actively participate in discussions  which makes others to keep an eye on you about your skill and interest which is also a possible way to get called for an interview.

It is not just for an entertainment. There are more here than what we knew. Let us use it at our best. If u knew something more than this, share it...
And share this if you find it little bit worthy :P

Friday, March 7, 2014

வேர்க்கடலை(1)

கை தட்டும் சத்தம் கேட்டவுடனேயே தன் சட்டையின்
மேல்பாக்கட்டில் இருந்த இரண்டு ரூபாய்
நாணயத்தை உள்ளங்கையில் அடைத்துக்கொண்டு, தன்னிடம் மிச்சம்
இருக்கும் 18 ரூபாயில் மதியம் அம்மா உணவகத்தில் தயிர்,சோரும், சாம்பார் சோரும் சாப்பிட்டால்,
இரவு வீடு திரும்பி விடலாம்
என்று மனக்கணக்கு போட்டுக்கொண்டிருந்தான் மணி.

"டப்"என்று கைதட்டும் சத்தம் அருகில் கேட்டவுடன்
நினைவுதிரும்பியவனாய் வலது கையில் இருந்த
நாணயத்தை இடது கைக்கு மாற்றினான். "தம்பி ஹெல்ப்
பண்ணு தம்பி", "ப்ரதர் ஹெல்ப் பண்ணுங்க ப்ரதர்" என்றவாரு அவன்
அமர்ந்திருந்த சீட்டின் பக்கம் வந்தாள் அவள். அவள் பெயர் புஷ்பவனம், திருநங்கையாக மாறியவுடம் "புஷ்பா" என்று மாற்றிக்கொண்டாள். சிகப்பு நிற பூ டிசைனிட்டு இருந்த புடவை, கருப்பு ஜாக்கட், அகன்ற தோள்
பட்டையுடன் இருந்தாலும், பெண்ணுக்கே உரித்தான நளினத்துடன் கையை நீட்டி கேட்டாள் பலரும் ஜன்னல் பக்கம் திரும்பி பார்த்தபடியே இருந்தனர். மணி மட்டும் தன்னிடம் இருந்த இரண்டு ரூபாயை அவளிடம்
நீட்டினான்.

நல்லாருப்ப தம்பி என்று தலையில் கைவைத்து ஆசிர்வதித்தாள்.
திடீரென்று "என்ன பாக்குற "
என்று கேட்டவாரே மணிக்கு பின்சீட்டில் இருந்த
முரளியை பார்த்து கேட்டாள். அவன் தன் கிளிவேஜை எட்டிப்பார்த்ததை அவள் கவனித்திருக்கக்கூடும்.

முரளி எதுவுமே தெரியாததைப்போல் தன் கையில் இருந்த ஸாம்ஸங் மொபையில் காண்டுப்பரவை ஆட்டத்தை ஆடத்துவங்கினான்.
அவள் கண்ணத்தை கிள்ளி முத்தமிட்டு அடுத்த கம்பார்ட்மெண்ட்
டை நோக்கி கைதட்டி பயணித்தாள்.

கண்ணத்தை கிள்ளுவதை பார்த்த மணிக்கு, முரளியை எங்கோ பார்த்ததுபோன்ற உணர்வு ஏற்பட்டது. கோடம்பாக்கம் ரயில்நிலையம் வந்ததால் ரயிலில் இருந்து இறங்கினான்.

---- மையான கூத்து ----

முரளி வீட்டிற்கு ஒரே பிள்ளை, காசிமேடு திடீர்நகரில் ருத்ரா என்பவரது வீட்டின் இரண்டாவது மாடிக்குடியிருப்பில் தன் தாய் தந்தையுடன் குடியேறி 3 மாதங்கள்தான் ஆகியிருக்கும்.

ருத்ரா இரண்டு பொண்டாட்டிக்காரர், முதல்மாடியில் இரண்டாவது மனைவியையும், கீழ்தளத்தில் முதல் மனைவியுடனும் வாழ்ந்து வருபவர். கருத்த உடல், வீட்டில் இருந்தால் மேல் சட்டை அணியும் பழக்கமே கிடையாது அவருக்கு. ஆறு குழந்தைகளுக்கு தகப்பன். அவருடைய வீட்டை கடந்து இரண்டாவது மாடி ஏறும்வரை மீன் வாடை அடித்தபடியே இருக்கும். ஒவ்வொரு முறை மாடி ஏறும்போதும்போதும் மூச்சை இழுத்துப்பிடித்துக்கொண்டுதான் ஏறுவான்.அவன் தாய் மங்கலம் எப்போதும் சோகத்துடனே குடும்பம் நடத்தி பழகியவள், அமையும் அனைத்தும் பாரமாக அமைவது அவள் துரதிஷ்டம் என புலம்பியபடியே கை, கால் விழுந்த தன் கணவன் ராஜலிங்கத்திற்கு பணிவுடை செய்து விடுவாள். "நான் காண்டி இல்லனா, உங்க நெலம ஈ முய்கிற பீ மாரிடா" என்பது மங்கலத்தின் மங்கள மொழி, ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது புலம்பிவிடுவாள்.

- தொடரும்

Monday, March 3, 2014

ஒளி தருபவர்கள்

இந்த இருண்ட உலகில் எப்படி நம் இருப்பை காட்டிக்கொள்வது,
எப்படி மற்றவர்களை இருளில் இருந்து விடுவிப்பது என்ற
சிந்தனையில் ஒரு திரியைப்போல இருக்கமாக
சுற்றிக்கொண்டு காத்திருந்தேன்.

மெழுகுபோன்றவர்களும், தீக்குச்சி போன்றவர்களும்
நம்மை சுற்றியபடியேதான் இருப்பார்கள். ஆனால் அவர்கள்
தங்களை தீக்குச்சியாகவோ, மெழுகாகவோ காட்டிக்கொள்வதில்லை.
அவர்கள் மலர்களில் இருந்து வரும் வாசனைக்கு சமமானவர்கள்,
அவரக்ளின் இருப்பு அவர்களுக்கு தெரியவதேயில்லை.
அவர்களின் அன்பு பிச்சைக்காரனுக்கு நூறு ரூபாய்
தாளை போடும் பரிவைப் போன்றது. அவர்கள் போகிற போக்கில்
மற்றவர்களை மகிழ்வித்துவிட்டு செல்பவர்கள். ஒரு ஈர்க்கும்
வாசனையால், ஒரு அலாதியான அன்பால்.

அவர்கள் நம்மிடத்தில் எந்த விதமான பிரதிபலனையும்
எதிர்பார்ப்பதில்லை.
தொலைந்துபோனவனுக்கு வழிகாட்டுபவனும்,
இழவு வீட்டுக்கு துக்கம் விசாரிக்க வருபவனும்
பிரதிபலனை எதிர்பார்ப்பார்களா என்ன ?

அப்படிப்பட்ட சில நபர்களை நாம் சந்திக்க நேரிடும் தருணம்
எதேர்ச்சியானது. அது நம்மை தூண்டி விடுகிறது. வாசம்
தரும் அந்த மலராகவே மாறிவிட முடியாதா என்று ஏங்க
வைக்கிறது, நாமும் நூறு ரூபாய் தாள் இட்டு உதவ
முடியாதா என்று சிந்திக்க வைக்கிறது.

வெறும் திரியாக கிடந்த எனக்கு மெழுகும்,
தீக்குச்சியுமாக இருந்து, மற்றவர்களுக்கு என் இருப்பையும்,
மற்றவர்களின் இருப்பையும் காட்ட உதவும் மனத்தையும்
குடுத்தவர்களாக நான் பார்ப்பது Leninraj Gopinathan
அவர்களும் மற்றும் Deepak Kothandan அவர்களும்தான்.
நன்றி தெய்வங்களே __/\__