Friday, August 29, 2014

இரகசியம்

எவ்வளவு இரகசியம் !!

ஒரு புன்னகையில்,
ஒரு கண்ணீரில்,
ஒரு குறுந்தகவலில்,
ஒருவர்மீது காட்டப்படும் அன்பில்,
அவர்கள் மீதான கோபத்தில்,
புகைக்கப்படும் ஒரு துண்டு சிகரெட்டில்,
ஒரு குவளை மதுவில்.
கடவுளிடம் வைக்கும் ப்ராத்தனையில்,
ஒரு குழந்தைக்குத் தரப்படும் முத்தத்தில்,
ஒரு 10 நிமிட குளியலில்,
உடுத்தும் உடைகளின் நிறத்தில்,
உடைகளின் ஈரத்தில்,
ஒரு கைப்பேசியில்,
ஒரு இளையராஜா பாடலில்,
தனிமையில்,
பரவசத்தில்,
மகிழ்ச்சியில்,
துரோகத்தில்,
துக்கத்தில்,
தவிப்பில்,
நடிப்பில்,
காதலில்,
கணவில்,
ஒரு பொய்யில்,
ஒரு சில உண்மையில்..

அய்யோ !!! எவ்வளவு இரகசியங்கள் !!!
இன்னும் எவ்வளவு இருக்கிறதோ !!!!

Friday, August 15, 2014

விடுதலை என்பது வேறு

நண்பன் ஒருவன் தான் ஒரு இந்தியன் என்றும் அதனால் சதந்திரதினத்தை கொண்டாடப்போவதில்லை என்றும் கூறி ஒரு கட்டுரையை வாட்சாப்பில் பகிர்ந்தான். கட்டுரையில் பாதி கருத்து மோடியை தாக்கியும், மசூதி இடிப்பு பற்றியும், பெண்கள் கற்பழிப்பு பற்றியும். நிலுவையில் கிடக்கும் கோர்ட் கேஸ்களைப்பற்றியுமே இருந்தது.

அது அவனுடைய தனிப்பட்ட பார்வையாக இருக்கலாம் என்று எண்ணி ஒரு சிரு வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். தகாத வார்த்தையில் பேசி வாதித்த என்னை தடுத்துவிட்டான்.

உண்மையில் இன்றைக்கு நடந்துகொண்டிருப்பது இதுதான். ஒரு சில முக்கியமான கருத்துகளை படிக்கும்போது, அந்த செய்தியின் மேல் உள்ள தனது ஈடுபாட்டை முழுவதுமாக செலுத்த மறுக்கின்றனர். மேலோட்டமாக கருத்துகளை படிப்பது என்பது பிட்டுக்கதைகளை படித்து சுயஇன்பம் காணும் காரியம் போன்றது. உணர்ச்சி என்பது வெறும் ஒரு பக்கக் கட்டுறையில் வரக்கூடாது, அதுவும் நம் தாய் நாட்டைப் பற்றிய வெறுப்புணர்ச்சி என்று வரும்போது சில நுட்பமான கருத்துகளை ஆராய வேண்டும்.அட்லீஸ்ட் வெறுப்புணர்ச்சியை நிரூபிக்கும் அளவிற்காவது கருத்துகளை சேகரிக்க வேண்டும். இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானோர் கருத்துகளின் ஆழத்தை கவனிக்க மறுக்கின்றனர். இன்னமும் அவர்களுக்கு புகட்டப்படுவதையே கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.

பெண்கள் கற்பழிக்கப்படுவதற்கும், சுதந்திரத்திற்கும் உள்ள தொடர்பை கடைசிவரை என்னால் ஜீரனிக்கவே முடியவில்லை. ஒரு மனிதனின் மூளையில் தோன்றும் ஒவ்வொரு கெட்ட சிந்தனையும் ஒரு வைரஸ்தான். ஒரு பெண்ணை கற்பழிப்பது என்பது வேறொரு நாட்டவனாகவோ, அல்லது தன் நாட்டைச்சேர்ந்தவனாகவோ இருந்தும் அவனை தட்டிக்கேட்கவோ, தண்டிக்கவோ முடியாத பட்சத்தில் சுதந்திரத்தை குறை சொல்வது என்பதை ஏற்றுக்கொள்ள முடியும். இங்கு நடப்பது என்பது வேறு. மனிதனும் அவன் எண்ணங்களில் இருக்கும் அழுக்கும் விடுதலை பெற்றபிறகுதான் நடந்துகொண்டிருக்கிறதா ?? 130 கோடிபேர்களை கொண்ட நாட்டில், தகவல் தொடர்பு வலுவாக உள்ள நாட்டில் இதைப்போன்ற தவறுகள் என்பது நடப்பது பெறுகிவருவது உண்மையில் கவலைப்பட வேண்டிய ஒன்றுதான். அதை முழுவதுமாக ஒழிக்க சிந்திப்பதை விடுத்து, விடுதலையை குறைசொல்வது எவ்விதத்தில் நியாயம் ?

சிரிப்பான விஷயமே மோடியைப்பற்றி கூறியதுதான். கொலைகாரனெல்லாம் PM ஆகிரான்,இது சுதந்திரமா ? என்பதை படித்ததும் கொல்லென நகைத்துவிட்டேன். மெஜாரிட்டி வாக்குகளை பெற்று, தன்னுடன் போட்டியிட்ட காங்கிரசின் எதிர்க்கட்சி அந்த்ஸ்த்தை கூட பிடுங்கிக்கொண்டு ஒரு கட்சி ஆட்சி அமைக்கிறது, ஓட்டு போட்டவர்கள் விடுதலைப்பெற்ற மக்கள், பின்னர் எப்படி அந்த கருத்தை ஏற்றுக்கொள்ள முடியும்.

இதுவும் கூட என் தனிப்பட்ட கருத்துதான். "அர்த்தமுள்ள இந்துமதம் " என்ற புத்தகத்திற்கு எதிராக வெளியிட்ட "அர்த்தமற்ற இந்துமதம்" என்ற புத்தகத்தின் ஆசிரியரை, கண்ணதாசன், போட பாடு என்ற திட்டியதில்லை. :P