Monday, October 26, 2015

Fast fiction 3

சுதாவையும் ரவியையும் பற்றி உங்களுக்கு தெரியாத ஒரு விஷயம் என்னிடத்தில் உள்ளது. சுதா யாராக இருந்தாலும் நீங்கள் கவலைப்படதேவையில்லை, அவளை உங்களுக்கு தெரியும். ரவி சுதாவை காதலித்துக்கொண்டிருக்கும்போது நீங்கள் பார்த்துக்கொண்டிருந்திருப்பீர்கள். அவர்கள் யாவருக்கும் தெரியும்படி காதலிக்கும் கடற்கறை காதலர்கள். அவர்களின் அதீத அன்பை, முத்தத்தை, ஓரப்பார்வையில் வெறுத்தபடி ரசித்திருப்பீர்கள்.
தலையையும் தூக்கி.
நீங்கள் போட்டோ எடுத்து வாட்சாப்பிலும், ஃபேஸ்புக்கிலும் கூட பகிர்ந்து, உங்கள் கண்டனத்தை தெரிவித்திருக்கக்கூடும். மறந்திருப்பீர்கள். டேக்ஸி ட்ரைவர் ஒருவர் என்னிடத்தில், ரியர் வ்யூ கண்ணாடியில் கூட அவர்களை பார்த்ததாக கூறியிருக்கிறாய். நியாபகம் வந்துவிட்டதா ?. அவர்கள்தான், என்னிடம் அழுதுகொண்டே ப்ளேடு ஒன்றை வாங்கி சென்றார்கள். எந்த ரவி, எந்த சுதா என்று சரியாக நியாபகமில்லை.

Friday, October 23, 2015

மனசாட்சி


அந்நியனைப் பார்த்தவுடன் அரசாங்கத்தை ஏமாற்றக்கூடாதென்றும், கத்தியை பார்த்து கோக் குடிக்கக்கூடாது என்றும், தனிஒருவனைப்போல் லட்சியம், இலக்கு என்றும் பல்வேறு பரிணாமத்தில் உணர்ச்சிகள் பீரிட்டு வந்தாலும், ஒரே ஒரு ஸெக்ஸ் படம் போதும் சப்த உணர்ச்சிகளும் அடங்கி, மடங்கி அதற்கேற்பதுபோல் மாறிவிடும். ஒரு சராசரி மனிதன் இவ்வளவுதான்.குரங்கு புத்தி என்று மட்டமாக சொல்லக்கூடாது. இது மனித புத்தியேதான். கேவலமான புத்தி.

ஆறுமாதத்திற்கு முன்பு கம்பேனியில் நலன் விரும்பி ஒருவரிடம் எதார்த்தமாக பேசும்போது என் கணவுகளை எல்லாம் உலரி வைத்திருந்தேன். இன்றும் அதே டாபிக்கை பேச நேர்ந்திருந்தது. "என்ன தம்பி 6 மாசத்துக்கு முன்னாடி ஆச்சா பூச்சானு சொன்னியே, எனி இம்ப்ரூமன்ட்"என்று கேட்டுவிட்டு நகர்ந்துவிட்டார். இந்த தமிழ் திரைப்படங்களில் எல்லாம் நம்மைப்போன்ற உருவத்திலேயே மனசாட்சி ஒன்று வந்து நம்மிடம் பேசுமே!. அதே போன்று, என் மனசாட்சியும் புதுப்புது வார்த்தைகளில் காித்துகொட்டிக்கொண்டிருக்கிறது. இலக்கை நோக்கி ஒரு அடிகூட எடுத்துவைக்காமல், என் இலக்கு இது, அது என்று பெருமை பீத்திக்கொள்ளும் புத்தியெல்லாம் என்னடா புத்தி என்று கேட்கிறது. வருத்தத்தின் உச்சியில் மீண்டும் யோசிக்கத்தொடங்கினால், "ம்கும் இப்ப இப்புடிதான் சாதிச்சு கிழிக்குறா மாதிரி யோசிப்ப, நீ என்ன பண்ணுவனு தெரியாதா?" என்று செருப்படி கொடுக்கிறது. அடிக்கடி தத்துவங்களாக சொல்லிக்கொண்டிருக்கிறது.
""கணவுகள் கணவுகளாகவே மங்கிக்கிடப்பதன் காரணம் இயலாமை இல்லையாம், முயலாமையாம்...

இந்த மனசாட்சியை எப்படி கொள்வது என்று முதலில் ஒரு திட்டம் போடவேண்டும்..:(

Sunday, October 18, 2015

சேவகன்

சாதாரனமாக
மிகச் சாதாரனமாக
இருக்கும் என்னை
"ம்மாக" பொங்கும்
பிசாசாக மாற்றி
உன் நாமத்தை
என் நாமத்தால்
சுத்தம் செய்யும்
சேவகனாக்கினாய்.
மகிழ்ச்சியின் உச்சத்தில்
நீயும் நானும்
தினம் இரண்டே முறைதான்.

Sunday, October 4, 2015

நானும் ரெவுடிதான்டா....

தோழி ஒருத்தியின் திருமணத்திற்கு அரக்கோணம் வரை சென்றிறிருந்தோம். ஒன்பது பேருக்கு அரக்கோணம் லோக்கல் ட்ரெயினில் சீட்டுப் பிடிப்பதற்காக நானும் நண்பன் முருகவேலும் கொம்பு சீவி விட்டு, சாராயம் ஊற்றப்பட்ட காளைகள் போல தயார் நிலையில் இருந்தோம். ரயில் வந்ததும் நாலு கால் பாய்ச்சலில் சீரி, கீரி ஜனக்கூட்டத்தை துவம்சம் செய்து உள்ளே சென்றால் சீட்டு முழுக்க வெறும் கர்சீப். எல்லாம் இந்த பெருசுகளின் பழக்கம்.

அது சூப்பர் ஃபாஸ்ட் ட்ரெயினாக இருந்தாலும் சரி, ஸ்பைஸ் ஜெட் விமானமாக இருந்தாலும் சரி , ஜன்னலில் சீட்டு பிடிக்கும் பழக்கத்தை மட்டும் நம் முந்தைய ஜெனரேஷன்கள் மாற்றிக்கொள்ள மாட்டார்கள். வந்த ஆத்திரத்திற்கு ரெண்டு கர்சீப்பை தள்ளி விட்டு, ஏன்யா அடிச்சு புடிச்சு ஏறுற நாங்களாம் என்ன *****யா என்றவாறு நினைத்துக்கொண்டு சீட்டில் அமர்ந்தேன்.

வரிந்துகட்டிக்கொண்டு கருப்பான காட்டு உருவம் ஒன்று ஏரியது, 5 அடி 5 அங்குலம், புஜபலபராக்கிரமசாலியெல்லாம் இல்லை, வந்ததும் வராமல் தூங்கிக்கொண்டிருந்த என்னுடைய ரட்சகன் நரம்பை எழுந்திரி எழுந்திரி என்றவாரு "மயிரான் மாதிரி பேசுற" என்று வாய் திறக்க, கனலாய் எரியும் எண்நெய் கிணற்றில் தண்ணீர் ஊற்றியதைப்போல், நெஞ்சை நிமிர்த்தி, குரலை உயர்த்தி சண்டைக்கு நின்றுவிட்டேன். எ கேல்குலேடட் ரிஸ்க்.

"ஏ சப்ப, கூட்னுபோய்டுப்பா அட்சிட போறேன்" என்று வாய்ச்சவடால் விடும் பொல்லாதவன் படத்தில் வரும் கேரக்டர்தான் நம் ஒரிஜினல் இமேஜ் என்றாலும், தட்டு கழுவும்போது தண்ணி பட்டாலே, வாயை உடைக்கும் நண்பனும், எனக்கு நிகராக வாய் சவடால் விடும் இன்னொரு நண்பனும் கூட இருந்ததால் கொஞ்சம் அதிகமாகவே எகுறி விட்டேன்.

பயபுல்ல மேல கை வச்சரருவானோ என்று பீதி ஒருபுறம் இருந்தாலும். ரிலாக்சாக அமர்ந்து வழக்கம்போல பாட்டு போடாமல் ஹெட்செட்டை மாட்டிக்கொண்டு, அவன் யாருக்கோ ஃபோன் போட்டு பேசிக்கொண்டிருந்ததை கேட்டுக்கொண்டிருந்தேன். "மாப்ள ட்ரெயினுக்கு பின்னாடி திருவலங்காடுல ஏறுடா, பசங்க மொரஷ்டானுங்க" என்ற என் காதில் விழும்படி சத்தமாகவே பேசினான். எனக்கு "யோவ் நானும் ரெவுடிதான்யா" வடிவேல் நினைப்பு வந்துவிட்டது. ஒவ்வொரு ஸ்டேஷனிலும் என்னை பதட்டமடைய வைப்பதாக நினைத்துக்கொண்டு பேதியில் முக்கும் பூனை போல முகரையை வைத்துக்கொண்டு, என்னை
ஒரு பார்வை, வெளியே ஒரு பார்வை என்று பார்த்துக்கொண்டே பூச்சி காண்பிக்க முயற்சித்துக்கொண்டிருந்தான்.
ஃபண்ணி ஃபெலோ, எந்த ஸ்டேஷனில் இறங்கினான் என்பதே தெரியவில்லை.

Friday, October 2, 2015

காலேஜ் காதலர்கள்

கல்லூரியில் காதல் கலாட்டா செய்துகொண்டிருந்த இணைப்பிரியா ஜோடிகளையெல்லாம் அவ்வப்போது நினைவுபடுத்தி கொள்வேன். காவியக்காதல்கள் அது. பேஸ்புக் தோன்றா, வாட்சாப் தோன்றா காலத்திலே தோன்றிய காதல் என்றால் சும்மாவா ? ஒவ்வொருவரும் ஒவ்வொரு வெரைட்டி, சிலர் காலேஜுக்கே தெரியும்படி காதலிப்பார்கள், சிலர் சீக்ரெட்டாக காதலிப்பார்கள், சிலர் மெஸேஜிளே காதலிப்பார்கள். உனக்குனு யாரு கெடைப்பா, எனக்குனு யாரு கெடைப்பா, வா கழுத காதலிக்கலாம் என்று காதலிக்கும் ஜோடிகளும் உண்டு.

2009,10 காலக்கட்டத்தில் மெசேஜ் பூஸ்டர் போட்டால் விரல் வலிக்கும் அளவிற்கு மெசேஜ் அனுப்பிக்கொண்டே இருக்கலாம். பின்னர் 2011ஆம் ஆண்டு TRAI கொண்டுவந்த மெசேஜ் கட்டுப்பாடுகள் காதலர்களின் கண்டனத்தை வெகுவாகப்பெற்றது என்றே கூறவேண்டும். வாக்கியத்தை கடைசி கேரக்டர் முடியும்வரை டைப் செய்து கச்சிதமாக காதல் செய்யத் தொடங்கியிருந்தார்கள்.

காதலிப்பவர்களை கலாய்த்துக்கொண்டும், காதலி கிடைக்காத துக்கத்தை மறைத்துக்கொண்டும், ஃப்ரீ பேர்டுகள் என்று பீத்திக்கொள்ளும் நபர்களெல்லாம் ஏகமனதாக ஒன்று சேர்ந்து, இந்த காதலர்களின் கான்வர்சேஷன்களையும், ஆடியோ ரெக்கார்டிங்குகளையும் கேட்டு "கெக்கபெக்கே கெக்கபெக்கே" என்று நாளெல்லாம் வயிறுமுட்ட சிரித்துக்கொண்டிருக்கும் தேர்ட் க்ளாஸ் பீப்பெலைப் போல தோற்றமளிக்கும் கூட்டத்தில் நானும் ஒருவன் என்று பெருமையாக மார்தட்டிக்கொள்வேன்.

அப்பு, குட்டி, செல்லம், டார்லிங், கண்ணு, புஜ்ஜி, மாமா, பொண்டாட்டி, பேபி என்று இவர்கள் காதலிக்கும், காதலனுக்கும் வைக்கும் செல்லப்பெயர்கள்தான் ஹ்யூமரின் உச்சக்கட்டம். "சை" எனத்தோன்றினாலும், யாருக்கோ கல்யாணம் ஆகிப்போக இருக்கிறோம் என்று தெரியாத ப்ரீமெச்சூர் காதலர்கள் இவர்கள்.
ஃபண்ணி ஃபெலோஸ்.

காதல் மன்னர்களாகவும், எனக்கும் ஆள் இருக்குடி என்று பெருமையாக சுற்றித்திரிந்த பெண்களையும் இன்னமும் நினைவிருக்கிறது.
"ப்ரேக்கப் ஆகி பிரிஞ்டாங்க" என்று கேட்கும் ஒவ்வொறு ஜோடிகளைப் பற்றிய விவரங்கள் கிடைக்கும்போதும், அவர்களின் காதலை ஒருமுறை நினைத்துக்கொள்வேன்.
                 
                  -|-

ரெஸ்ட் இன் பீஸ். ஆமென்.

அவர்கள் நினைப்பார்களா என்பது சத்தியமாக தெரியாது.

மோசார்ட்டின் கவிதை

இன்று இசைக்கலைஞர் மோசார்ட்டின் டாக்குமென்டரியை பார்ப்பதற்கான சந்தர்ப்பம் அமைந்தது. எ லெஜன்ட் இன் ம்யூசிக் கம்போசிங் !!. அவரது Symphonyகளின் ரகசியங்கள், அறிந்தகொள்ள முடியாத, முடிவே அடையாத இசையை பற்றியெல்லாம் விவரித்திரிந்தார்கள். தன் வாலிப வயதில், வேலை கிடைக்காமல், தாயைப்பிறிந்து, தந்தையிடம் இருக்கும் காலக்கட்டத்தில், தன் தந்தையுடன் பேசிக்கொண்டதை Concertiயாக அதாவது பியானோவின் இசையாக மாற்றி இருந்ததை வாசித்துக்காட்டியிருப்பார்கள். யு வில் லவ் ட். போதாதென்று "வைரமுத்து இலக்கியத்தடம்" என்ற புத்தகத்தை படித்துக்கொண்டிருக்கிறேன். எழுத்தாளர்களும் கவிஞர்களும் வைரமுத்துவின் கவிதை வரிகளை வெவ்வேறு வகையில் பிரதிபலித்தும், அவர்தம் எண்ணங்களின் ஆழத்தை கற்பனையாக யூகித்தும் எழுதப்பட்டிருக்கும் புத்தகம்.

கவிதைக்கும் இசைக்கும் உண்டான தனித்துவமே இதுதான். வாசிக்கப்பட்டதும், எழுதப்பட்டதும் நமக்காக இருக்காது, ஆனால் வாசிக்கவும், கேட்கவும் தூண்டிக்கொண்டே இருக்கும். மீண்டும் மீண்டும். நம்முடைய வாழ்க்கையில் தொடர்புபடுத்தி ஒரு ஓவியத்தை தீட்டவைத்து, வண்ணங்கள் பூசவைக்கும். இசையையும் கவிதையையும் புரிந்துகொள்ள ஞானியாக இருக்கவேண்டும் என்பதுகிடையாது. வெறும் ரசிகனாக இருந்தாலே போதும்.


"கரையில் கலையும் கடலின் கனவுகள்,
கரைக்கன் னத்தில் கடல்முத்தங்கள்
நகர்ந்து விரைந்து நடந்து கரையில்
தகர்ந்து போகும் தண்ணீர்ச் சுவர்கள்" - வைரமுத்து.


"https://www.youtube.com/watch?v=Jj-8gUrKXds" - Mozart`s Sample Documentary