சில நாட்களாக எனக்கு புத்தகம் படிக்கும் ஆர்வம் பெருவிட்டது . வீட்டில் அம்மா முதல் தங்கை வரை "ஏன்டா நைட்டெல்லாம் கதை புக்க படிக்கிறேன்னு லைட்ட போட்டு தூக்கத்த கெடுக்குற, இந்த ஆர்வத்த பாட புத்தகத்துல காட்டி இருந்தா இந்நேரம் டிகிரி வாங்கியிருக்கலாமே " என்று புலம்பியபடியே உள்ளனர்...
வாஸ்த்தவம்தான் இருந்தாலும் எப்படி இதுபோன்ற புத்தக ஆர்வம் பெருகியது என்று ஆராயந்ததில் கிடைத்த பதில் இதுதான்.
சிறுவயது முதலே எங்கள் இட்லி கடையில் பொட்டலம் மடிக்க தேவையான பேப்பர்களை கிழிக்கும் வேலை என்னுடையதுதான்..அவ்வப்போது கண்ணில் படும் ஹீரோயின்களின் ஹிப்பை திருட்டுத்தனமாக பார்ப்பதோடு கிசு,கிசுக்களையும் அங்கொன்றும் இங்கொன்றுமாக விளையாட்டு செய்திகளையும் படிப்பதுண்டு.
சிலநேரங்களில்10 கிலோ பேப்பர்களை கூட ஒரே மூச்சில் கிழித்ததுண்டு.
நமக்கு எதில் ஆர்வமோ அதில் இருந்து படிக்க ஆரம்பித்தால்தான் புத்தகம் படிக்கும் பழக்கம் சுலபமானதாகும்.
"விதை சேற்றில் இருக்கிறதே என்று கவலைப் படவேண்டாம், கண்டிப்பாக கனி கிடைக்கும்"
No comments:
Post a Comment